15 நவ., 2010

சிந்திக்க சில துளிகள்


படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.


மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்
# மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. -நபிகள் நாயகம்.

# தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். -சிம்மன்ஸ்

# உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.

# நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.அன்னை தெரசா.

# எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய 
முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.

# மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.

# இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி 
ஆத்மானந்தம் கிடையாது. ‍ ‍‍‍ ஸ்ரீசாரதாதேவி.

# மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. ‍ சாணக்கியர்.

# நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.

# உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை. 
வோல்டன்.

# அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். ‍ ஜெபர

கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்ததே. -ரஷ்யா.

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. -ஸ்காட்லாந்து.

நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்

நாக்கு மூன்று அங்குலமேயானாலும், ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறனுள்ளது. -ஜப்பான்

தேவையில்லாதவைகளை வாங்குவதால் விரைவில் அவசியமானவற்றை விற்க நேரிடும். -பிரான்ஸ்.

நல்லவனாக இருப்பது எளிது; நேர்மையாளனக இருப்பது கடினம். -பிரெஞ்ச்

ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவனிடம் அதிகாரத்தைக் கொடு. - பல்கேரியா

நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து.

சுயநலம் என்ற நெருப்பு, முதலில் மற்றவர்களைப் புசிக்கிறது; பின்னர் தன்னையேப் புசிக்கிறது. -ரஷ்யா

வாய்ப்புகளை உணர்வதே அறிவுக் கூர்மை. - சீனா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons