12 நவ., 2010

மன அழுத்தம்

‘டென்ஷன்’ என்பதற்கு ‘மன அழுத்தம்’ என்று அகராதி பொருள் தருகிறது. எலாஸ்டிக்கை இழுத்துப் பிடித்தால் இறுக்கும் நிலைதான் ‘டென்ஷன்’. அதாவது, சாதாரணமாக இல்லாமல் இருப்பது. சாதாரண மான நிலைக்குப் போகத் துடிக்கும் நிலை. இந்த நிலையையே மன அழுத்தத்தின் வரையறையாகக் குறிப்பிடலாம். யூனிவர்ஸல் டிக்ஷனரி ‘டென்ஷன்’ என்பதற்கு ம்ங்ய்ற்ஹப் ள்ற்ழ்ங்ள்ள், அதாவது மனஅழுத்தம் என்று பொருள் தருகிறது, உளவியல் அறிஞர்கள் பொதுவாக ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு, மன அழுத்தம் என்றுதான் பொருள் கொள்வர். எனவே மன அழுத்தம், டென்ஷன் என்பவற்றை ஒரே பொருளில் கொள்ளலாம்.

மனஅழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்க மாகும். மன அழுத்தத்தை மூன்று வார்த்தை களால் கூறமுடியும். அவை, மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் ஆகியனவாகும். இதன் நுண்மையான பொருள் என்னவெனில்? மற்றவர்கள் மேல் ஏற்படும் தாக்கமே ‘மன அழுத்தம்’ ஆகும். மனஅழுத்தம் என்பது வித்தியாசமானது இது தனிப்பட்ட மனிதரின் மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச் செய்து அதனால் சிந்திக்கவோ செயல்படவோ முடியாமல் செய்துவிடுகிறது.

‘ஸ்ட்ரெஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழுத்தம் என்று அறிஞர் சொல்வர். ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி ‘ஸ்ட்ரெஸ்’ என்பதற்கு இறுக்கும் விசை, சக்தியை உறிஞ்சும் விசை, ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசை என்ற பொருள்களைத் தருகிறது.

மன அழுத்தம் உடல் வேலையைப் பல விதங்களில் பாதிக்கிறது. ஸ்கெலிஃபர் (1983), கிகோல்ட் கிளாசர் (1985), சுமரா மற்றும் டோனா போன்றோர் பல விதங்களில் இம்மன அழுத்தத்தைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். அதன் படி இதயநோய்கள், மனச்சோர்வுக்கு வழி வகுத்தல், பதற்றம், குறைவான தன்னம்பிக்கை ஆகியவற்றை இது ஏற்படுத்துகிறது.

1936-ல் ஆர்ன்ஸ் செலி மனரீதியான அழுத்தம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். லூஸரஸ், கோகென் (1977) இவர்கள் மன அழுத்தத்தால் மனிதர்கள் சில நேரங்களில் எல்லை மீறக்கூடிய செயலைக் கூடச் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மில்லர் (1990) கூறுகை யில் அதிகச்சுமை அல்லது குறைவான சுமை, ஒரு சக்தி வாய்ந்த தகவல்களைக் கூறும் பொழுதும் அதை கேட்கும் பொழுதும் நாம் இதை செய்து விடுவோமா என்று எண்ணும்போதும் மன அழுத்தம் ஏற்படும் என்று கூறுவார்.

மருத்துவரின் கூற்றுப்படி, மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை, உடல்நலத்தை மிகவும் பாதிக் கிறது என்றும் அது ரத்த அழுத்தம் அதிகரித்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல், நரம்புத் தளர்ச்சி, கிட்னி பாதிப்பு, அல்சர், பசியின்மை, தூக்க மின்மை, தலைவலி, ஹார்ட் அட்டாக் போன்ற நோய்களை உண்டு பண்ணும் என்றும் கூறுகின்றனர்.


மன அழுத்தம் மனநலமும்
டென்ஷனால் நமது உள்ளம் பல வழிகளில் பாதிப்படைகிறது. எப்பொழுதும் ஒரு திருப்தி யில்லா மனநிலை, கவலை, தவிப்புடன் இருப்பது, போரடித்தல், எளிதில் கோபம் கொள்ளுதல் ஆகியவை மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு களாகும்.

சான்றாக, நார்ச்சத்துள்ள உணவு நல்லது, உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல, என்று சொல்லப்படும் செய்தியை உரிய நபர்கள் எடுத்துக் கொள்வ தில்லை. இது போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல், மது குடித்தல், நகம் கடித்தல் போன்ற பழக்கங்களும் டென்ஷன் காரணமாக ஏற்படுகின்றன.


மன அழுத்தத்தின் வகைகள்

ஹான்ஸ் செல்ய என்பவர் மன அழுத்தத்தை மூன்று வகைப்படுத்துகிறார்.

மனஅழுத்தத்தை மூன்று வகையாகக் பிரிக்கலாம் 1. ஆரோக்கியமான மன அழுத்தம்

2. சமநிலை மன அழுத்தம் 3. கடுந்துயர மன அழுத்தம். இதில் முதல் வகை மன அழுத்தமான ஆரோக்கிய மன அழுத்தம் சிறப்பானது. நாம் செய்கின்ற காரியங்களுக்கு உதவியாக இருந்து, நம் மனநலம், உடல்நலம், இரண்டிற்கும் நன்மை செய்யும். சான்றாக தேர்வுக்குத் தயார் செய்யும் பொழுது ஆறு மாதப் பாடங்களை இரண்டே நாட்களில் படித்து முடிப்போமே. வேகமாய் மனப்பாடமும் ஆகிவிடுமே. அது ஆரோக்கிய மன அழுத்தம். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி தேடித் தருவதும் இதுதான். நம் திறமையை வெளிப்படுத்த இது மிகவும் அவசியம்.

அடுத்து, தினசரி செய்யும் வேலை களுக்குத் துணையாய் நின்று நமது மனதை சமநிலையில் வைத்திருக்க உதவுவது, அதிக சந்தோஷத்தையும், அதிக துக்கத்தையும் அதிர்ச்சி யில்லாமல் ஏற்றுக்கொள்ள உதவுவது. இதனை சமநிலை மன மனஅழுத்தம் என்பர். அதாவது, 8.30 மணிக்கு பேருந்தைப் பிடிக்க 8.25க்குக்கூட போகலைன்னா நம்மால் வேகமாய்ச் சென்றும் பேருந்தைப் பிடிக்க முடியாது என்று நினைப்பது. இந்த வகை மனஅழுத்தம் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யத்தூண்டுகிறது.

மூன்றாவதாக நம்மைக் காயப்படுத்தும், கடுந்துயரம் தரும், நம் உடல் நலத்தை பாதிக்கும் மனஅழுத்தமான இதனைக் கடுந்துயர மனஅழுத்தம் எனலாம். சான்றாக மனவழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மயக்கம் வரும் அதிகமாக வேர்க்கும் வயிற்றைப் பிசையும். இது மரணச் செய்தியாகவும் இருக்கலாம். மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம். அல்லது தொடர்ச்சியான கணவன் மனைவி சண்டை, வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, பாலியல் பிரச்னை, உடல் நலக்குறைவு, உடல் ஊனம், வேலைப்பளு… போன்ற காரணங் களாலும் இது வரலாம். மேலும், மனிதனின் இயல்புகளை அடக்கி வைத்தல் போன்ற காரணங் களாலும் அதீத மனஅழுத்தம் ஏற்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியுடையவர்கள், தன்னைப் பற்றி தாழ்வான எண்ணம் உடையவர்கள், எதையும் அவநம்பிக்கையோடு அணுகுபவர்கள், எதையும் தான் விரும்பிய வண்ணம் மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் மனஅழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு நோய்க்கும் ஆளாகி றார்கள்.

தேர்வு எழுதும் நேரத்தில் மாணவர் களிடம் அவர்களுடைய எச்சில் கொண்டு ஆய்வு நடத்தியபோது அவர்களுடைய நோய் எதிர்க்கும் சக்தி மற்ற நேரங்களைவிட மிகவும் குறைந் திருந்தது. இதற்கு மனஅழுத்தம்தான் காரணம்.

வேலைக்குச் செல்பவர்களும்கூட நீண்ட தூரம் பயணம் செய்து தினசரி வேலை பார்ப்பது, அதிக நேரம் உழைப்பது ஆகியவற்றால் சரியான ஓய்வில்லாமல் இருக்கிறார்கள். பெண்களுக்கு இரட்டிப்பான வேலை எல்லா இடங்களிலும் இருப்பதால் மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

பல்நிலை ஊழியர்களுக்கு இது போன்ற காரணங்களால் மனஅழுத்தம் ஏற்பட, சமுதாயத்தில் பெரும்பங்காற்றும் ஆசிரியர் களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை இனி காண்போம்.

* வேலை செய்யும் இடம், வகுப்பறை, சிறியதாக, காற்று வசதி இல்லாமல் இருந்தால், மிகுந்த இரைச்சலோடு இருந்தால், அதிக வெப்பமாக இருந்தால்.

* சரிவர நம்மால் ஒன்றைப் பேசித்தீர்த்துக் கொள்ள முடியாமை.

* மாறிக்கொண்டேயிருக்கும் பாடத்திட்டம், நுண்ணறிவு மிகுந்துகொண்டேயிருக்கும் மாணவர்கள் இவற்றைச் சமாளிக்க தனது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

* விருப்பமற்ற தொழில் நுட்ப மாறுதல்கள்.

* தேவைக்கேற்றசம்பளம் இல்லாமை, மற்றவரது வேலையைச் சேர்த்து தானே பார்த்தாலும் அதற்கேற்றஊதியம் வழங்கப்படாதது.

* நம்முடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம், தலைமையாசிரியர் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம்.

* நாம் நம்முடைய எண்ணங்களை சக ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதம், மற்றவர்கள் நம்மிடம் பேசுவதை நாம் புரிந்து கொள்ளும் விதம்.

* வேலைக்கேற்ற சமூக அந்தஸ்து இல்லாமை, தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களைவிட ‘மன அழுத்தம்’ அதிகம். (குறிப்பாக, 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரசுப்பள்ளியில் கூட, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பஞ்சாயத்துப் பள்ளி, நாகராட்சிப் பள்ளி, கிராமத்துப் பள்ளி என நிறைய அந்தஸ்து வேறுபாடுகள் காரணமாக (ஆய்வு 2002).

* வேலைப்பளு என்பது, அதிக வேலை அல்லது அதிக பொறுப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

* நேரம்

* ஓய்வு நேரத்தில் வகுப்பு எடுக்கச் சொன்னால், விடுமுறைநாட்களிலும் வகுப்பு சொன்னால், கூடுதல் பொறுப்பு வகிக்கச் சொன்னால், வகுப்பில் மிகவும் அதிக மாணவர்கள் இருந்தால்.

* நிர்வாகத்தின் சட்டதிட்டங்கள், விதி முறைகள், நோக்கங்கள், குறிப்பாக தனியார் பள்ளிகளில் கடும் விதிமுறைகள்.

* நமது அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளப் போதிய விடுமுறைநாட்கள் இல்லாமை.

* நமது மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்தின் மூலமாக

* நம்மைக் குறித்தான முடிவெடுப்பதில் கூட நம்முடைய பங்கு குறைவாக இருப்பது.

* உடல் ரீதியான வியாதிகள்.

இதுவரை சொல்லப்பட்டக் காரணங்கள் சில மட்டுமே. இது அவரவர் தமது வேலை பார்க்கும் சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஓய்விலும் நிறைய விஷயங்கள் கவனிக்க வேண்டியவை உண்டு. உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நாம் உண்மையிலேயே வேலை எதுவும் செய்யவில்லை, அதனால் ஓய்வாக இருக்கிறோம் என்று கொள்ள முடியுமா? என்றால் இல்லை. ஏனென்றால்? மனதில் ஏதேனும் எண்ணங்கள் கவலைகள் உழன்று கொண்டேயிருக்கும்


இதற்கு என்ன செய்ய முடியும்? யோகா செய்யலாம். அதில் ‘சவாசனம்’ என்று மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்கும் பயிற்சி உண்டு. கால் முதல் உச்சந்தலை வரை ஒவ்வொரு பாகமாக ஓய்வு கொள்ளுமாறு ‘சவாசனம்’ செய்வது. ஆனால் இப்பயிற்சியை தேர்ந்த பயிற்சியாளரிடம் பயின்று கொள்வது நன்று.

மன அழுத்தத்திற்கானத் தீர்வுகள்

இந்த டென்ஷனிருந்துத் தப்பிக்கத்தான் மனம் விரும்புகிறது. ஆனால் அதனின்று தப்பிப்பதைவிட, நேருக்கு நேர் சந்தித்து புரிந்து கொண்டு பேசி தீர்த்தாலே அப்பிரட்சனையோடு மனஅழுத்தமும் தீர்ந்துவிடும் என்றும் மகிழ்ச்சி யுடன் வாழ முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மேலும்,

1. தன்னைத் தான் அறிந்து குறைகளை அகற்றி, நிறைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

2. மனப்போராட்டமில்லாதிருத்தல், உண்மை நிலையறிந்து ஒழுகுதல், நல்ல உடல்நிலை, மனநிலை, மனவெழுச்சி முதிர்ச்சி ஆகிய வற்றைப் பெற்றிருத்தல்.

3. வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சாதிருத்தல், சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றிற்குத் தீர்வு காணல்.

ஆகிய பண்புகள் நிறைந்தோரை உளநல முடையவர் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது.

தூய்மையான பழக்க வழக்கங்கள் தூய்மையான இடம் ஆகியவை மனவழுத்தத்தை வெகுவாகக் குறைக்க வல்லவை. 2. குழந்தைகளை நன்றாக விளையாட அனுமதிக்க வேண்டும். 3. முதியவர்கள் தங்கள் உடலுக்கேற்றஉடற்பயிற்சி செய்தால் முதுமையிலும் சந்தோஷத்துடன் உற்சாகத்துடன் வாழ முடியும்.

மனஅழுத்தம் துயர சம்பவங்களினால் மட்டுமல்ல மகிழ்ச்சியான சம்பவங்களாலும் ஏற்படும். இப்படியான நேரங்களில் திட்டமிடுவ தாலும், அனுபவம் வாய்ந்தவர்களிடம் கவலையைப் பகிந்துகொண்டு ஆலோசனை கேட்பதாலும் மனஅழுத்தத்தைக் குறைத்து மீண்டு வரமுடியும்.

செயல் முக்கியமில்லை, எண்ணங்கள் தான் முக்கியம் என்ற கருத்து எல்லா நேரங் களிலும் சரியாக இருப்பதில்லை. சரியான முறையில் வெளிப்படுத்தப்படாத எந்த மனவெழுச்சியும் மற்றவர்க்கும் நமக்கும் மன அழுத்தம் உருவாகக் காரணமாக இருக்கின்றன.

நல்ல சத்துணவை உட்கொள்ளுதல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடம்பு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். உடம்பு சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளைத் தவிர்த்தால் மனஅழுத்தம் இல்லாமல் வாழலாம்

மனஅழுத்தத்திற்கானக் காரணங்களும் அவற்றின் பாதிப்புகள்

* அதிக ரத்த அழுத்தம்

* இதய நோய்

* நரம்புத் தளர்ச்சி

* அல்சர்

* பசியின்மை

* தூக்கமின்மை

* தலைவலி

* வேலைப் பளு

* பாதுகாப்பற்ற உணர்வு

* திறமைக்கேற்ப ஊதியம் இல்லாமை

* தகுதிக்கேற்ப வேலை இல்லாமை

* விருப்பமற்ற நுட்ப மாறுதல்கள்

* நமது மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்தின் மூலமாக

* உடல் ரீதியான வியாதிகள்

* குறைவான தன்னம்பிக்கை

மனஅழுத்தம் குறைக்க வழிகள்
* முழுமையான தூக்கம்

* சத்துள்ள உணவு

* தொடர்ந்த உடற்பயிற்சி

* சுய ஆய்வு

* திட்டமிடுதல்

* எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுதல்

* சரியான தகவல் தொடர்பு

* அறிவியல் பூர்வமான அணுகுமுறை

* சுமூகமான வேலைச் சூழல்

* ஆணவம் நீக்கல்

* பிரச்சனையைப் பேசி தீர்த்தல்

* கலந்தாய்வு

* தன்னம்பிக்கை வளர்த்தல்


டென்ஷனை தைரியத்துடன் எதிர் நோக்குபவர், தான் செய்யும் செயலின் நன்மை தீமை அறிந்தவராகவும், தன்னம்பிக்கை உடையவ ராகவும், எதையும் அறிவியல்பூர்வமாக அணுகு பவராகவும், சரியாகத் திட்டமிடுபவராகவும், தன் உரிமையையும் உணர்வுகளையும் சரியான முறையில் வெளிப்படுத்துபவராகவும், தன் உடல்நலனில் அக்கறைகொள்பவராகவும், முறையான உடற்பயிற்சி மற்றும் முறையான ஓய்வு கொள்பவராகவும் ஒருவர் இருந்தால் வாழ்க்கையில் எதையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு செயல்பட்டால் இமாலயச் சாதனை புரியலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons