12 நவ., 2010

INFORMATION

மெல்லிய இசை கடுமையான வேலையைக் கூட எளிமையாக மனத்திருப்தியுடன் செய்து முடிக்க உதவும். பேரிரைச்சல் மன அமைதியை இழக்கச் செய்யும் என்கிறது நியூயார்க் நகரில் மேற்கொண்ட ஆராய்ச்சி. இரைச்சல் கேட்போரின் மூச்சுக்குழாயிலும் ஆபத்தை விளைவிக்கக் கூடுமாம். இனிய இசையே உற்பத்தித் திறனுக்கு வித்திடும்.

************************* *****************


*குயில் ஒரு புத்திசாலியான பறவை. அது தனக்காக ஒரு கூட்டை கட்டிக் கொள்வதில்லை. அதனால் முட்டையிடும் காலங்களில் தனது முட்டைகளை வேறு பறவைகளின் கூடுகளில் போட்டுவிடும். கூட்டின் சொந்தக்காரப் பறவை தனக்கே தெரியாமல் குயிலின் முட்டையையும் அடைகாக்கும். குஞ்சு பொறித்தவுடன் குஞ்சாக இருக்கும் குயில் இன்னும் பொறிக்காமல் இருக்கும் மற்ற முட்டைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும். ஆனாலும் கூட்டின் சொந்தக்காரப் பறவையானது குயில் குஞ்சினையும் தமது குஞ்சாகவே பாவிக்கும்

************************* ******************

நகம் நாள் ஒன்றுக்கு 0.1மில்லி மீட்டர் வளரும். நகத்திற்கு உணர்ச்சி கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள் உற்பத்தியாகும்.

*************************** ******************
*சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.

**************************** ****** **************
*கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் எனப் பாராட்டியவர் இடைக்காடர்.

***************************** *************
ஆக்டோபசி என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின் நீளம் மட்டும் மூன்று மீட்டர்.

***************************** *************
*பீகார் மாநிலத்தை முன்பு மரக நாடு என்று அழைத்தார்கள்.

*பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் ஃபீல்டு.

*சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்தம். இதனைத் தொகுத்தவர் அர்ஜன் தேவ் என்பவர். இவர் ஐந்தாவது குரு.

*பிரிட்டீஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா.

*இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.


*விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

*அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக்(வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.

*பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப் பட்டது.

*அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக்( ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.

*இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

*இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons