12 நவ., 2010

தத்துவங்கள்

ஒவ்வொருவரும் தனது வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், லாபம் பெறுவது, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது இரண்டையும் சமமாக கருத வேண்டும்.

எந்த ஒரு தொழிலுக்கும் அன்பு நிறைந்த உபசாரமும், இனிமை கலந்த உரையாடலும் வெற்றியை தேடி தரும்.

பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

எந்த ஒரு செயலிலும் மன துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கடுமையாக உழைப்பவனை விட, திறமையாக உழைப்பவன் வாழ்வில் முன்னேறுகிறான்.

ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.

நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.

எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.

சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்போடும், சிறப்பாகவும் செயல்படுபவர்களே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.

மனம் தளராமல் நம்பிக்கையோடு உழைப்பவர்கள் நிச்சயமாக தங்களது குறிக்கோளை அடைய முடியும்.

எந்த ஒரு சாதனையும் செய்யாமல் வாழ்க்கை முழுவதும் வாழ்வதைவிட, புகழ் சூழ்ந்த ஒரு மணி நேர வாழ்வு கூட மேன்மையானதாகும்.

நமது லட்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நிச்சயம் நிறைவேறும்.

வெற்றியின் உச்சிக்கு செல்ல விரும்பினால், உங்கள் பணியை கீழ் மட்டத்தில் இருந்தே சிறப்பாக செய்யுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons